செய்திகள்

ப்ரியா பவானி சங்கர் முன்னணி நடிகைகளுடன் போட்டியிடுகிறார் | Priya Bhavani Shankar competes with top actresses

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தவகையில் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலமே கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார்.

Priya Bhavani Shankar competes with top actresses

படங்களில் மட்டுமன்றி வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் ‘டைம் என்ன பாஸ்’ உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு திரையில் இவரின் ஆரம்பம் சீரியலில் இருந்து தான் தொடங்கியது. அந்தவகையில் ‘கல்யாண முதல் காதல் வரை’ என்னும் சீரியல் மூலமே முதலில் தோன்றி இருந்தார்.

Priya Bhavani Shankar competes with top actresses

இவர் தன்னுடைய அறிமுகப் படத்தைத் தொடர்ந்து பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம், கசடதபற’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக ‘மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி’ உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார்.

அந்த வகையில் டாப் நடிகர்களுடன் போட்டி போட்டு ஒரு மாதத்துக்குள்ளையே மூன்று படங்கள் வெளியாக உள்ளது. அதாவது ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள அகிலன் படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் லாரன்ஸ்க்கு ஜோடியாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள ருத்ரன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள இந்த மூன்று படங்களிலும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதன் மூலம் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts