செய்திகள்

சொந்த ஹோட்டல் பிரியாணி குறித்து பெருமிதம்அடைந்த ப்ரியா பவானி ஷங்கர் | Priya Bhavani Shankar Proud of her own hotel biryani

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபோதே அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக களமிறங்கினார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அவர் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

Priya Bhavani Shankar Proud of her own hotel biryani

தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி ஷங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

Priya Bhavani Shankar Proud of her own hotel biryani

ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2, ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பொம்மை உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

சினிமாவில் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் தனி தொழில் தொடங்குவது காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான். அந்த வகையில் அவர் லியாம்ஸ் டைனர் (Liam’s Diner)என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்தார். புதிய தொழில் தொடங்கிய அவருக்கு ரசிகர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரமலான் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் தனது ஹோட்டலுக்கு சென்று அங்கு செய்த பிரியாணியை சாப்பிட்டுள்ளார்

இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “எங்களது லியாம்ஸ் டைனர் ரெஸ்டாரண்ட்டில் ரமலானை கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் முன்னேறும் எங்களது இளம் டீமை நினைத்து பெருமையாக இருக்கீறது. அங்கு நான் சாப்பிட்ட பிரியாணி மற்றும் தால்ச்சாவின் ருசி என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. குறிப்பாக அங்கு கிடைக்கு பான் ஷேக் எப்போழுதும் என்னுடைய ஃபேவரைட் சியர்ஸ்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts