ஆஸ்கர் விழாவில் இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் ராம்சரணுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது | Priyanka Chopra’s photo with Indian film stars Ram Charan at the Oscars goes viral
95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மார்ச் 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது விழாவை அகாடமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், யூடியூப் சேனல் மற்றும் ABC சேனல், ஸ்டார் மூவிஸ் உள்ளிட்டவற்றில் கண்டு ரசிக்கலாம்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக் கூத்து பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆஸ்கர் விழாவுக்காக ராம்சரண், ஜூனியர் என்டிஆர், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட இந்திய நடிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் கூடியுள்ளனர். ஜூனியர் என்டிஆர் ஹாலிவுட் ரசிகர்களுடன் ஒரு பக்கம் போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் நடிகை பிரியங்கா சோப்ரா ராம்சரண் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஆஸ்கர் விருது விழா மேடையில் இந்திய சினிமாவை சார்ந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்ஆர்ஆர் படக்குழுவுடன் அலங்கரிக்க காத்திருக்கிறார். மேலும், ரெட் கார்ப்பெட்டில் நடக்க பிரியங்கா சோப்ராவும் ஆஸ்கர் விருது வழங்க தீபிகா படுகோனும் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தங்கள் குடும்பத்தினருடன் ஆஸ்கர் நிகழ்ச்சிக்காக தயாராகி உள்ளனர்.
