கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 21 பூஜையுடன் தொடங்கியது | Produced by Kamal and starring Sivakarthikeyan, SK 21 started with Pooja.
சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், SK 21 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

சென்னையில் நடைபெற்ற SK 21 படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள் மகேந்திரன், கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராகவும் SK 21 படத்தின் தயாரிப்பாளராகவும் நடிகர் கமல்ஹாசனும் இந்த பூஜை விழாவில் பங்கேற்றார். அவரை படக்குழுவினர் வரவேற்றனர்.