செய்திகள்

வதந்தியால் டென்ஷனாகிய தயாரிப்பாளர் போனி கபூர்…!(Producer Boney Kapoor is tensed by rumours)

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப்பார்வை படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் போனி கபூர். அதைத்தொடர்ந்து அஜித்தை வைத்து வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியதாக தகவல் வந்தது. இந்நிலையில் தற்போது போனி கபூர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த போனி கபூர், லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. இது வெறும் வதந்திதான் என அதிரடியாக அறிவித்துள்ளார் போனி கபூர்.

Producer Boney Kapoor

Similar Posts