விஜய் தான் பெரிய ஸ்டார் என்ற வார்த்தையால் சர்ச்சையில் தயாரிப்பாளர் தில் ராஜு..!(Producer Dil Raju in controversy for saying that Vijay is the biggest star)
‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படமும் பொங்கலுன்று வெளியாகவுள்ளது.
இந்தப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக முழுவதும் ரிலீஸ் செய்யும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், “தமிழ்நாட்டில் விஜய் தான் பெரிய ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், அவருக்கு அடுத்து தான் அஜித் இருக்கிறார்.
தியேட்டர்களை சம அளவில் பிரித்து கொடுப்பதாக சொல்கிறார்கள், கூடாது. இது பிஸினஸ்”. “இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்” என கூறியுள்ளார் தில் ராஜு.
