ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!(Pt sir First look of Hiphop Adhi’s new film)
தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களின் 23வது திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகராக ஹிப் ஹாப் ஆதியின் 7-வது திரைப்படமாக #HHT7 தயாராகிறது.
விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும், இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்க, இளைய திலகம் பிரபு, தியாகராஜன், பாண்டியராஜன், இளவரசு, முனீஸ் காந்த், காஷ்மிரா பரதேசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் #HHT7 படத்திற்கு “PT Sir” பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு, “PT Sir” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
