Mr Zoo Keeper படம் குறித்து அப்டேட் சொன்ன புகழ் | Pugazh Update about Mr. Zoo Keeper movie
நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இணைந்து இவர் செய்யும் சேட்டைகள் வேற லெவல் ரகம். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி சீசனாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பட வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிகழ்ச்சி அதிக ரீச் ஆகியுள்ளது.

சினிமாவிலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் புகழ் நடிப்பில் வெளியான நிலையில், தற்போது காசேதான் கடவுளடா படத்தில் ஷிவாங்கியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் MR Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார் புகழ். இந்தப் படத்தின் சூட்டிங் பிலிப்பைன்சில் நடைபெற்ற நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ் தெரிவித்துள்ளார்.

படத்தின் நாயகி ஷிரின் கஞ்ச்வாலாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள புகழ், MR Zoo Keeper படம் இருவருக்கும் சிறப்பான நட்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்காக தான் அதிக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் விரைவில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாகவும் புகழ் அப்டேட் தெரிவித்துள்ளார். இதையடுத்து புகழிற்கு ஷிரிங்கா சாவ்லாவும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
