ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கிறாரா த்ரிஷா, ராங்கி திரைவிமர்சனம்..!(Raangi movie review,Has Trisha shaken the bar in action)

ஏ.ஆர் முருகதாஸ் கதை எழுத, இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷாவின் அதிரடி ஆட்டம் நிறைந்த திரைப்படம் ராங்கி. இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய சண்டைக் காட்சிகள் ட்விஸ்ட் என த்ரிஷா நடிப்பில் பிண்ணியிருக்கிறார். அதுமட்டுமன்றி மாஸான டயலொக்குகளையும் தெறிக்க விட்டுள்ளார். வாங்க கதையை பார்க்கலாம்.
படக்குழு

இயக்கம்:
எம் சரவணன்
தயாரிப்பு:
சுபாஸ்கரன்
வெளியீடு:
லைகா ப்ரடக்ஷன்
முக்கிய கதாபாத்திரங்கள்:
திரிஷா, அனஸ்வர ராஜன்,ஜான் மகேந்திரன், லிசி ஆண்டனி
இசை:
சி சத்யா
படத்தின் கதை
எம் சரவணன் இயக்கிய த்ரிஷாவின் ராங்கி, துனிசியாவில் பயங்கரவாதியின் மறுபக்கத்தைக் கற்றுக் கொள்ளும் சென்னையில் ஒரு பத்திரிகையாளரை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படமாகும்.

படத்தின் முதல் காட்சியிலேயே, சென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான தையல் நாயகி (த்ரிஷா) தான் செய்த குற்றத்திற்காக FBI ஆல் விசாரிக்கப்படுகிறார். அது ஏன் என்றால் தையல் நாயகி, தவறு செய்பவர்களைக் கேள்வி கேட்பதைத் தவிர்க்காத ஒரு பத்திரிகையாளர். அவர் சில நிகழ்வுகளைப் பதிவுசெய்து, மக்களை கேள்வி கேட்பதற்குப் தூண்டுபவராக விளங்குகிறார். இந்நிலையில் வெளிநாட்டு தீவிரவாதி ஒருவருடன் பெண் ஒருவர் சாட் செய்கிறார். அவன் தீவிரவாதி என அந்த பெண்ணுக்கு தெரியாது. அந்த பெண் பயன்படுத்தும் டிபி போட்டோ, த்ரிஷாவின் அண்ணன் மகளின் போட்டோவாகும். அந்த கணக்கைக் சுஷ்மிதாவின் (அனஸ்வர ராஜன்) பெயரிலிருக்கிறது.
இது ஒரு கட்டத்தில் த்ரிஷாவுக்கு தெரியவர, அதைக் கண்டுபிடிக்க அவரும் அந்த 17 வயது பையனுடன் சாட் செய்கிறார். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு த்ரிஷாவுக்கு வருகிறது. அவன் யார் என அறிய முற்படும் போது, இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்குச் சென்ற அமைச்சர் ஒருவர், அங்கு எண்ணெய் டீல் ஒன்று செய்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை அந்த இளைஞர் வலைத்தளத்தில் பதிவிடுகிறார்.

அதைப்பார்த்த த்ரிஷா, தான் வேலை செய்யும் ஊடகத்தில் அதை ஒரு ப்ரேக்கிங் செய்தியாக்குகிறார். அதனால் பல பிரச்னை ஏற்படுகிறது. எண்ணெய் டீல் செய்த அமைச்சரும் கொல்லப்படுகிறார். இதனால் த்ரிஷா மீது பொலிஸ் விசாரணையில் இறங்குகிறது. பின் த்ரிஷாவையும், அவரது அண்ணன் மகளையும் அழைத்துக் கொண்டு, தீவிரவாதியை தேடி அந்த நாட்டுக்குச் செல்கிறது போலீஸ்.
அதன் பின் தீவிரவாதி பிடிக்கப்பட்டானா? த்ரிஷாவின் அடுத்த நிலை? அப்போது ஏற்படும் திருப்பங்களின் தொகுப்பே ராங்கி திரைப்படத்தின் கதை.
திறமையின் தேடல்
இப்படத்தின் சிறந்த அம்சம் த்ரிஷாவின் ராவான நடிப்பு, வசனங்கள் அனைத்தும் அட்டகாசம். அஅவர் நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக உள்ளன. திரிஷாவின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமை.

த்ரிஷா மற்றும் ஆலிம் ஆகிய இருவரும் தான் படத்தை தோளில் சுமக்கின்றனர். தீவிரவாதியாக ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு சிறப்பு.
ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருந்தாலும், திரையில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒருவித உணர்ச்சிகரமான தொடர்பைக் கொண்டுவர இயக்குனர் முயற்சித்துள்ளார். அடுத்தடுத்து சஸ்பென்ஸ் குறையாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சரவணன். அரசியல், டெக்னாலஜி, காதல் என மூன்று வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக இணைத்து பார்வையாளர்களுக்கு சேர்க்க வேண்டிய கருத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ளார்.
கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு மற்றும் சத்யாவின் பின்னணி இசை இரண்டும் ராங்கி படத்தை ஏங்கி பார்க்குமளவில் பெரிய அளவில் உயர்த்தி, கதைக்களத்துடன் நன்றாகப் பொருந்துகிறது.
படத்தின் சிறப்பு
கதாநாயகியின் நடிப்பு
ஒளிப்பதிவு, பிண்ணனி இசை
பிரமாண்டமான காட்சிகள்
புதிரான திரைக்கதை
குறைவாக ஆராயப்பட்ட கதைக்களம்

படத்தின் சொதப்பல்கள்
அளவுக்கதிகமான ஹீரோயினிசம்
அதிக சண்டைக் காட்சி
லாஜிக் கொஞ்சம் மிஸ்
மதிப்பீடு: 3.0/5
ஒரு த்ரில்லானா பரபரப்புடன் அதிரடியான ஆக்ஷ்சன் திரைப்படம் தான் இது. திரிஷாவின் ரசிகர்களுக்கு செம்ம விருந்து அதுமட்டுமன்றி அனைவரையும் அவரது நடிப்பாலும் கவர்ந்துள்ளார். மாஸ் டயலொக்.மொத்தத்தில், ராங்கி திரைப்படம் ரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.