செய்திகள் | திரை விமர்சனம்

இராவண கோட்டம் படத்தின் திரைவிமர்சனம் | Raavana Kottam movie review

Raavana Kottam movie review

இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி உட்படப் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள ‘இராவண கோட்டம்’ திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

விக்ரம் சுகுமாரன்

தயாரிப்பு:

கண்ணன் ரவி

வெளியீடு:

கண்ணன் ரவி குழு

முக்கிய கதாபாத்திரங்கள்:

சாந்தனு பாக்யராஜ் , பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி

இசை:

ஜஸ்டின் பிரபாகரன்

படத்தின் கதை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலத்தெரு மக்களுக்காக போஸும் (பிரபு) கீழத்தெருவினருக்காக சித்ரவேலும் (இளவரசு) ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்தி கொண்டு செல்ல, சாதியைக் கடந்த நட்பு மேலோங்குகிறது. அரசியல் ஊருக்குள் வந்தால் எங்கே பிரிவினை வந்துவிடுமோ என பயந்து, அரசியல் கட்சியினரைக் கூட ஊர்மக்கள் அனுமதிப்பதில்லை.

Raavana Kottam movie review

இந்நிலையில் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் தீவிர முயற்சிகள் அங்கு அரங்கேறுகின்றன.

Raavana Kottam movie review

இதனையடுத்து சாந்தனு – ஆனந்தி காதல் இதற்கு பகடைக்காயாய் மாற, தண்ணீர் பஞ்சத்தின் ஆணிவேரான சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து செயல்படும் பிரபுவும் இளவரசுவும் இறுதியில் கொல்லப்படுகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? இரு பிரிவுகளிடையே கிராமத்தில் மூண்ட கலவரம் மீண்டும் ஓய்ந்ததா என்பதே இப்படத்தினுடைய மீதிக்கதை.

படத்தின் சிறப்பு

சாந்தனு, கயல் ஆனந்தி உள்ளிட்டோரின் கதாபாத்திரம் மிகப்பெரிய பலமாக உள்ளது.

பிரபு இளவரசன் என இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை அழகான கோர்வையாக கொண்டு சென்றுள்ளார்.

படத்தின் சொதப்பல்கள்

திரைக்கதையில் சிறு தொய்வு

பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்தும் படம் அதை மேலோட்டமாக அணுகியிருப்பதும், சில காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யம் கிட்டாததும் இராவண கோட்டத்தில் உள்ளே மைனஸ்சாக தெரிகிறது.

மதிப்பீடு: 3/5

கிராமத்து பின்னணியில் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் முதல் பாதியில் கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறு லெவலில் இருந்திருக்கும்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts