செய்திகள்

வரலட்சுமி சரத்குமாருக்கு ராதிகா சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் | Radikaa Sarathkumar wished Varalakshmi Sarathkumar on her birthday

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

Radikaa Sarathkumar wished Varalakshmi Sarathkumar

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்குப்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2 என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த வீர நரசிம்ம ரெட்டி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு,ராதிகா சரத்குமார் அவரது சமூகவலைத்தளத்தில் சில புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Similar Posts