மீண்டும் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.| Ramya Pandian posted glamor photo again.
டம்மி டப்பாசு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் என அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனது சோகக் கதையை கூறி ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்திருந்தார். குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, பிக் பாஸ் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ வாய்ப்புகளை பெற்றார். பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஒற்றை ரோஜாவை கையில் வைத்துக் கொண்டு ஆடை அணியாமல் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
