செய்திகள்

பாரதிராஜாவைப் பற்றி ரம்யா பாண்டியனின் உணர்ச்சிகரமான பதிவு | Ramya Pandiyan’s emotional post about Bharathiraja

2016-ம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். இந்தப் படத்துக்குப் பிறகு கதைத் தேர்வின் குறைவால் சில படங்கள் தோல்வியடைந்தன.

Ramya Pandiyan’s emotional post about Bharathiraja

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்து ஒடிட்டியில் வெளியான ‘ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மாமூட்டிக்கு ஜோடியாக, ரம்யா பாண்டியன் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இவரின் கைவசம் இடும்பன்காரி உள்ளிட்ட சில படங்கள் உள்ளது.

திரையுலகில் படு பிசியாக இயங்கி வரும், ரம்யா பாண்டியன் ஷூட்டிங் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற போது, அங்கு எதிர்பாராத விதமாக இயக்குநர் பாரதி ராஜாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் பேசி மகிழ்ந்த தருணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டு, சில புகைப்படங்களையும் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநரான பாரதிராஜா சாருடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி – உண்மையிலேயே ஒரு அற்புதமான பயணம். விலைமதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Similar Posts