செய்திகள் | திரைப்படங்கள்

மாமன்னன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது | Red Giant Movies has officially announced the major announcement about Mamannan

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும்  திரைப்படம்’மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Red Giant Movies has officially announced the major announcement about Mamannan

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்தாண்டு மார்ச்-4 ல் துவங்கியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு துவங்கி உள்ளார் என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மாரி செல்வராஜ் மேற்பார்வையில் வடிவேலு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

Similar Posts