செய்திகள் | திரைப்படங்கள்

மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது | Red Giant Movies released a new poster on the occasion of Mari Selvaraj’s birthday

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

Red Giant Movies released a new poster

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Red Giant Movies released a new poster

தற்போது சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு ஏற்கனவே துவங்கி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 39-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இயக்குனர் மாரி செல்வராஜை வாழ்த்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. கன்னி & சிப்பி வேட்டை நாய்கள் சூழ செம்மண் புழுதி பறக்கும் சூழல் போஸ்டரில் அமைந்துள்ளது.

Similar Posts