வாரிசு மற்றும் துணிவு சிறப்புக் காட்சிகளின் தடை நீக்கம்..!(Removal of ban on varisu and thunivu specials sceans)
வாரிசு மற்றும் துணிவு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், 13,14,15,16 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இதனை தொடர்ந்து, திரைப்பட விநியோகஸ்தர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி, கவர்னர் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 12, 13 மற்றும் 18 ஆகிய 3 கூடுதல் நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜன 14, 15, 16, 17ம் தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி உள்ள நிலையி,ல் மேலும் 3 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
