அவருடன் நடிக்க வேண்டாம் என தமன்னாவிடம் கோரிக்கை..! ரசிகர்கள்
அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் டி147 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தமன்னா.
திலீப் ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று தமன்னாவிடம் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.
ஒரு நடிகையை ஆள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவர் திலீப். அவருடன் சேர்ந்து நடிக்க ஏன் ஒப்புக் கொண்டீர்கள், எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் அவரை விளாசுகிறார்கள்.
மேலும் அருணிமா சர்மாவின் ஜீ கர்தா என்கிற வெப் தொடரிலும் நடிக்கவிருக்கிறார்.
