எனக்கும் மார்பிங் வேறு விதமா நடந்துச்சு என தெரிவித்த ரேஷ்மா பசுபுலேட்டி..!(Reshma Pasupuleti said that morphing happened differently for me too)
விமல் நடிப்பில் ஓடிடி வெளியிடாக ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.
இவரது அண்மையில் தனியார் தொலைகாட்சி வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு ஏற்பட்ட மார்பிங் அனுபவம் குறித்தும் அதை பார்த்து விட்டு குடும்பத்தினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் பேசினார்.
“என்னுடைய சகோதரி எனக்கு திடீரென்று போன் செய்து உன்னோட “ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் செக்ஸ் வீடியோ லீக்” அப்டின்னு வீடியோ வெளியாகி இருக்கிறது என்று கூறினார்.

என்னுடைய தந்தை தயாரிப்பாளர். சகோதரர் நடிகர். என்னுடைய குடும்பம் சினிமா பின்னணியில் உள்ளதால் இதை புரிந்து கொண்டார்கள். ஆனால் திரைப்பின்னணியில் இல்லாத எளிய பெண் ஒருவருக்கு இப்படி நடந்தால் நிச்சயமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பார்.
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். தற்கொலை வரைக்கூட சென்றிருக்கலாம். என்னுடைய குடும்பம் இதை அருமையாக எதிர்கொண்டனர்” என பேசியுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.