ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது தாயைப் பற்றிய உணர்ச்சிகரமான பதிவைப் பகிர்ந்துள்ளார். | Robo Shankar’s wife Priyanka shares an emotional post about her mother.
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரீட்சயமானார் ரோபோ ஷங்கர். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் அப்படியே சினிமா பக்கம் வரவும் உதவியாக இருந்தது.

ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான பதிவு செய்துள்ளார்.
அதாவது அவரது தாயார் இறந்து 3 வருடங்கள் ஆகிவிட்டதாம். அவரது நினைவு நாளையொட்டி அம்மாவின் புகைப்படத்துடன் வருத்தமான பதிவு போட்டுள்ளார்.

அதாவது நீ எங்க இருந்தாலும் பரவாயில்லைம்மா. எப்பவும் என்க்கூடவே இரும்மா.என்னோட பலம்,பலவீனம் எல்லாமுமா இருந்து வழி நடத்தனும்மா.ரொம்ப மிஸ் பண்ணுறேன் லலிதாம்மா