செய்திகள் | சின்னத்திரை

ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி திடீரென திருமணம் செய்து கொண்டார் | Roja serial fame actress Priyanka Nalkari got married suddenly

சன் டிவியின் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்தவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது அவர் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Roja serial fame actress Priyanka Nalkari got married suddenly

ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா நல்காரிக்கு ரோஜா சீரியல் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

Roja serial fame actress Priyanka Nalkari got married suddenly

இந்நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி தனது காதலரை மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பல சிக்கல்களை தாண்டி இந்த திருமணம் நடந்து முடிந்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை தான் பிரியங்கா நல்காரி திருமணம் செய்து இருக்கிறார். ஏற்கனவே அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டதாக செய்தி பரவியது.

இந்நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணம் தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Similar Posts