ருத்ரன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Rudhran Movie Review

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளிவந்துள்ள ருத்ரன் திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.
படக்குழு
இயக்கம்:
எஸ்.கதிரேசன்
தயாரிப்பு:
எஸ்.கதிரேசன்
வெளியீடு:
முக்கிய கதாபாத்திரங்கள்:
ராகவா லாரன்ஸ்
ஆர்.சரத்குமார்
பிரியா பவானி சங்கர்
பூர்ணிமா பாக்யராஜ்
இசை:
ஜி.வி.பிரகாஷ் குமார்
படத்தின் கதை
5ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன்.
ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ருத்ரன் (லாரன்ஸ்) போக்குவரத்து ஏஜென்ஸி வைத்திருக்கும் அப்பா(நாசர்), அம்மா (பூர்ணிமா பாக்யராஜ்) ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன். தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்யும் அனன்யா(ப்ரியா பவானிசங்கர்) மீது ருத்ரனுக்கு காதல் ஏற்படுகிறது. தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.

தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் மரணடைகிறார். நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் 7 கோடியாக திருப்பி கொடுக்க வேண்டுமென கடன் கொடுத்தவர் கேட்க, தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாய்யை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்.

இதற்கிடையில் பிரியா பவானி ஷங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தனது தாய் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார்.

ருத்ரன் தாய் எப்படி இறந்தார்? பிரியா பவானி ஷங்கருக்கு என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன என்பதை ருத்ரன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தின் சிறப்பு
ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம்.
மனைவியாக வரும் பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார்.
முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு மிரட்டல்.
ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு படத்திற்கு பலம்.
சொல்ல வந்த கருத்து.
படத்தின் சொதப்பல்கள்
தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்திற்காக ஹீரோ பழிவாங்கும் கதையை பல காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ருத்ரனின் கதையும் அது தான். அடுத்தது என்ன என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.
நம்மவே முடியாத ஆக்ஷன் காட்சிகள்
மதிப்பீடு: 2.5/5
சலித்துப்போன பழிவாங்கும் கதை என கமெர்ஷியல் விஷயங்கள் தான் படத்தில் நிரம்பி இருக்கிறது. ஆனால், தாய் தந்தையை தனியாக விட்டுவிடாதீர்கள் என கதிரேசன் சொல்ல வந்த கருத்து, இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது. அதற்க்கு பாராட்டுக்கள். முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.