சம்பளத்தை தர முடியாது என்றதால் மறுத்த சமந்தா…!
சமந்தா தற்போது ’குஷி’ படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை சமந்தா நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்திற்காக சமந்தாவுக்கு படக்குழுவினர் ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும் ஆனால் அவர் தனக்கு ரூ.4 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும்,
ஆனால் படக்குழுவினர் இதற்கு ஒத்து கொள்ளாததால் சமந்தா இந்தப்படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.