விஜய் இதற்காக தான் சைக்கிளில் வந்தார் என கூறிய சஞ்சீவ் ..!
கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேத்தலுக்காக வாக்களிக்க விஜய் சிவப்பு மற்றும் கருப்பு சைக்கிளில் வந்திருந்தார்.
விஜய் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தான் சைக்கிளில் வந்தார் என்றும், சிவப்பு மற்றும் கருப்பு சைக்கிளில் வந்து மறைமுகமாக குறிப்பிட்ட கட்சிக்கு விஜய் ஆதரவு தருகின்றார் என்றும் பல பேச்சுக்கள் உலா வந்தன.
விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சைக்கிளில் வந்ததைப்பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியது, விஜய் சைக்கிளில் வந்ததைப்பற்றிய செய்திகளை கேட்டு அவருக்கு போன் செய்தேன். அதற்கு அவர், வாக்களிக்கும் இடம் என் வீட்டின் அருகில் தான் இருக்கின்றது. அதற்கு நான் காரை எடுத்துக்கொண்டு செல்வது சரியாக இருக்காது. அப்படியே நான் காரை எடுத்துக்கொண்டு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்.
எனவே தான் நான் சைக்கிளில் சென்றேன் என்றாராம் விஜய். தற்போது சஞ்சீவ் சொன்ன இந்த தகவல் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.