செய்திகள்

சரிகமப புகழ் ரமணியம்மாள் காலமானார் | SaReGaMaPa fame Ramanyammal passed away

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான சரி கம பா நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக பிரபலமானவர் தான் ரமணியம்மாள். இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருடைய நாட்டுப்புற பாடல் பலருடைய நெஞ்சங்களை கவர்ந்த ஒன்று. இவருக்கு ராக்ஸாட்ர் ரமணியம்மாள் எனும் பெயரும் உண்டு.

SaReGaMaPa fame Ramanyammal passed away

இவர் தமிழில் வெளிவந்த காத்தவராயன் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

பின் ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வயது மூப்பால் பாடகி ரமணியம்மாள் இன்று மரணமடைந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Similar Posts