சார்பட்டா பரம்பரை வில்லன் ஜான் கொக்கினின் உருக்கமான பதிவு | Sarpatta Parambarai villain John Kokken’s heartwarming record.
வீரம் முதல் பாகுபலி வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஜான் கொக்கின். அடியாளாக நடித்து வந்த கொக்கின் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து பிரபலமானார்.

வேம்புலியாக நடித்த ஜான் கொக்கின் அஜித்தின் துணிவு படத்தில் வங்கியின் அதிபராகவும் நடித்து அஜித்துக்கே வில்லனாக மாறினார். கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களிலும் ஜான் கொக்கன் வில்லனாக நடித்து வருகிறார்.

எஸ்எஸ் மியூசிக் தொகுப்பாளினி பூஜா ராமசந்திரனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக 2வதாக திருமணம் செய்துக் கொண்டார் ஜான் கொக்கின். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகனை தூக்கி வைத்துக் கொண்டு ஜான் கொக்கின் வெளியிட்டுள்ள பதிவு ‘நான் நடிக்கும் படங்களில் நான் வில்லனாக இருக்கலாம். ஆனால், என் மகனுக்கு நான் தான் ஹீரோ’ என ரொம்பவே உருக்கமான கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.