இசையமைப்பாளர் அனிருத்தா சின்ன வயசிலேயே என்ன செய்திருக்கிறார் பாருங்க | See what music composer Aniruddha has done at a young age
இன்றைய காலகட்டத்தில் பிரபல இசைமைபாளராக வலம் வருபவர் தான் அனிருத். இவர் 2011-ம் ஆண்டு வெளியான “3” படத்தின் மூலம் இசைமைபாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைத்து பாடலையும் ஹிட் கொடுத்து மக்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது ரஜினி, கமல், அஜித் விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிருத், சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’அந்த நாள் முதல் இந்த நாள் வரை..’ என பாடலையும் பின்னணியில் போட்டு தான் சின்ன வயசிலேயே கீபோர்ட்டு வாசிக்க கற்றுக்கொண்டு தற்போது வரை விடாமல் இருப்பதை கூறியுள்ளார் அனிருத்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அனிருத் சிறுவயதில் உள்ள மாதிரியே இப்பவும் அப்டியே இருக்கீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் சின்ன வயசிலேயே அவர் இப்படி இசை மீது ஆர்வமாக இருந்தது பற்றியும் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.