செய்திகள்

விஜய்யின் லியோ படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கோபமடைந்த சீமான் | Seeman was angry that the title of Vijay’s film Leo had to be changed

இயக்குனரும் நடிகரும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்,லியோ படத்தின் தலைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Seeman was angry that the title of Vijay’s film Leo

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Seeman was angry that the title of Vijay’s film Leo

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், லியோ படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். “லியோ படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். தமிழர்கள் தான் படம் பாக்குறாங்க. நாங்கள் தான் நம் தாய்மொழி அழியாமல் சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கு. படங்கள் பெயர்கள் எல்லாம் முன்பு தமிழ் தான் இருந்தது. ஆனால் தற்போது மறுபடியும் பிகில், விசில்னு வருது. மாத்தனும்” என சீமான் பதில் அளித்துள்ளார்.

Similar Posts