பேத்திக்காக போராடும் பாட்டி – செம்பி பட விமர்சனம்!(Sembi Movie Review)

அஸ்வின் குமார் லட்சுமிகாந்தன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் செம்பி. பிரபு சாலமன் இயக்கிய நாடகம் இது. அந்த திரைப்படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
படக்குழு

இயக்கம்:
பிரபு சாலமன்
தயாரிப்பு:
ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான்
வெளியீடு:
ஏ ஆர் என்டர்டைமெண்ட்
முக்கிய கதாபாத்திரங்கள்:
கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, சிறுமி நிலா
இசை:
நிவாஸ் கே பிரசன்னா
படத்தின் கதை
அன்பு என்ற பேருந்து, கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் வரை பயணித்த 24 பயணிகளின் கதைகளை விவரிக்கிறது இந்த திரைப்படம்.
பத்து வயது செம்பி(நிலா) மற்றும் அவளது பாட்டி வீராத்தாயி (கோவை சரளா) குறிச்சி நிலத்தில், கொடைக்கானலின் மலைப்பகுதிகளில் இயற்கையின் மத்தியில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். செம்பிக்கு படித்து பெரிய வைத்தியராக வேண்டும் என ஆசை. அம்மா அப்பா இல்லாததால் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் கிடைக்கும் மலைத்தேன், கிழங்குகளை விற்று தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் வீரத்தாயின் பேத்தி செம்பி கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்த 3 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஆனால் பாட்டி செந்நாய் கடித்துவிட்டதாக மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு போன பிறகுதான் தன் பேத்திக்கு நடந்த கொடூரம் தெரியவருகிறது.

அதை அறிந்ததும் வீரத்தாயி பொலிஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கிறார். ஆனால் அந்த 3 பேரும் பெரிய இடத்தவர்கள் என்பதால் ஒரு போலீஸ் அதிகாரி மூலம் செம்பியைத் தாக்கி, வழக்கை வாபஸ் பெறும்படி அவளது பாட்டியை வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாமல் அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கிவிட்டு, இருவரும் தப்பித்து கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்த அன்பு என்ற பேருந்தில் ஏறுகின்றனர். தம்பி ராமையாவுக்கு சொந்தமான அந்த பேருந்தில் பல்வேறு நபர்கள் பயணிக்கின்றனர்.செம்பிக்காக குரல் கொடுப்பவர்களின் ஆதரவாளராக அஸ்வின் குமார் அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அதன் பின் அந்த பேரூந்தில் என்ன நடக்கிறது..? பணமும் அதிகாரமும் இருந்தால் உலகை இயக்கலாமா? செம்பிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதே மீதி திரைக்கதையில் வருகிறது.
திறமையின் தேடல்
துணிச்சலுடன் இயக்குனரின் எண்ணத்தை அப்படியே தன்னுடைய நடிப்பில் வீரத்தாயாகவே வெளிப்படுத்தியுள்ளார் கோவை சரளா. கோவை சரளா முதன்முறையாக சீரியஸ் அவதாரத்தில் தோன்றி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் தான். அவரது நடிப்பே பாராட்டத்தக்கது.
குக்கு வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் கொஞ்சம் கேலிச்சித்திரமாகத் தோன்றினாலும்,த னது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்திஅவர் மற்றொரு ஹீரோவாக மாறுகிறார்.

செம்பியாக நடித்த சிறுமி நிலாவின் நடிப்பு பிரமாதம். அவரது நடிப்பும் இப்படத்திற்கு பெரிய பலம்.
தம்பி ராமையா தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக சீரியஸ் ஸ்கிரிப்டில் தம்பி ராமையா காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஏனைய நடிகர்களும் அவரவர் பாத்திரத்தை கச்சிதமாக முடித்துள்ளனர் எனலாம்.
ஒளிப்பதிவாளர் ஜீவனின் ஒளிப்பதிவும் நன்று. படத்தின் யதார்த்ததைக்கூட்டிய ஒப்பனையாளர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரின் பணி குறிப்பிடத்தக்கது.நிவாஸ் கே பிரசன்னா இப்படத்தை ‘மியூசிக்கல்’ BGM குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் சாமர்த்தியமாகவும், சவாலுடனும் படமாக்கியிருக்கிறார். உங்களுக்குக் கொடுக்கப்படும் அன்பை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரபு சாலமன்.
படத்தின் சிறப்பு
கோவை சரளா மற்றும் சிறுமியின் நடிப்பு
முதல் பகுதி
கதைக்களம்
ஒளிப்பதிவு, இசை ,Bgm

படத்தின் சொதப்பல்கள்
இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் தீவிரமாகவும் இருந்திருக்க வேண்டும்.
கொஞ்சம் ஒட்டாத பாடல்கள்
சில பல லாஜிக்
மதிப்பீடு: 3/5
செம்பி நிச்சயமாக ஒரு உண்மை முயற்சி, ஏனெனில் இயக்குனர் அதை மையக் கதாபாத்திரங்களின் வலியை உணர வைக்கிறார். மற்றும் படம் ஒரு விறுவிறுப்பாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.