செய்திகள்

உடை மாற்ற கூட அறை இல்லை, கடந்தகாலம் குறித்து செந்தில் கணேஷ்..!(Senthil Ganesh about the past,There is no room even to change clothes)

நாட்டுப்புற பாடல்களை கணவன் மனைவி சகிதமாக சேர்ந்து பாடி பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜேஷ் ராஜலட்சுமி.

தன்னுடைய ஆரம்பகால பயணங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட செந்தில் கணேஷ் கூறியதாவது ஒருமுறை ஒரு கச்சேரியில் பாடுவதற்காக அழைத்திருந்தார்கள் அப்போது நான் என் மனைவி உள்பட 5 பாடகர்கள் அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தோம்.

அப்போது உடை மாற்றுவதற்கு ஒரு அறை கிடைக்குமா..? என்று அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அவரிடம் கேட்டோம். ஆனால், அவர்களோ சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் திண்ணையை காட்டினார்கள். வேறு வழியில்லாமல் எங்களிடம் இருந்த புடவையை வைத்து ஒரு சின்ன அறை போல் செய்து அதில் நின்று கொண்டுதான் என் மனைவி உட்பட அனைவரும் உடை மாறினார்கள்.

அது கொடுமையான விஷயம். அப்போது எனக்கு மனம் வலித்தது. அப்படியான வேதனைகளைக் கடந்து என்னுடைய எங்களுடைய விடா முயற்சியினாலும் ரசிகர்களின் ஆதரவினாலும் தற்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம். ரசிகர்களுக்கு நன்றி என்று பேசியிருக்கிறார் செந்தில் கணேஷ்.

Senthil Ganesh

Similar Posts