செய்திகள் | சின்னத்திரை

தனது பிறந்தநாளை காதல் கணவருடன் கொண்டாடும் சீரியல் நடிகை பிரியங்கா| Serial actress Priyanka celebrates her birthday with her romantic husband

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. கடந்த 2010ஆம் ஆண்டு சந்திர சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தமிழ் சினிமாவில் தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Serial actress Priyanka celebrates her birthday with her romantic husband

நடிகை பிரியங்கா நல்காரி 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.ரோஜா சீரியலில் கதாநாயகியாகரோஜா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். ரோஜா சீரியல் மூலம் பிரபல்யமானர்.

Serial actress Priyanka celebrates her birthday with her romantic husband

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தனது காதலரை ரகசிய திருமணம் செய்திருந்தார்.

இந்நிலையில் கணவருடன் எடுத்துக்கொண்ட படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்தவகையில் தற்போதுதனது பிறந்தநாளை தனது கணவருடன் மகிழ்ந்து கொண்டாடி வருகிறார். அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Similar Posts