சின்னத்திரை

தெரு தெருவாக பிச்சையெடுக்கும் சக்திமான் சீரியல் நடிகை..!(Shaktiman serial actress who begs from street to street)

பிரபல சீரியலான ‘சக்திமான்’ சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நுபுர் அலங்கார். இவர் 27 ஆண்டுகளில் 157 சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நுபுர் தெருத் தெருவாக சென்று பிச்சை எடுத்த புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சொகுசாக வாழ்ந்த ஒரு நடிகை இப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து நடிகை நுபுர் கூறுகையில், என் மனதளவில் பாதிக்கப்பட்டு, வாழ்க்கையே வெறுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்று மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என புரியவில்லை. லாக்டவுன் காலத்தில் தான் என்னுடைய எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டேன்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் என் அம்மா இறந்து விட்டார். நான் சன்னியாசம் போக விரும்பியது என் கணவருக்கு தெரியும். அதனால் அவரிடம் கேட்க வேண்டியது இல்லை. என் முடிவை அவரும், அவரின் குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டார்கள். நானும், கணவரும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. என் திருமண வாழ்க்கை நீடித்தவரை நல்லபடியாக இருந்தேன். என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

Shaktiman serial actress

Similar Posts