செய்திகள்

அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் ஷாலினி அஜித்.| Shalini Ajith is making Ajith fans happy

நடிகர் அஜித் குமார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில், மகனின் கால்பந்தாட்ட ஆர்வத்தை கண்டு ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக மகனுடன் கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு ஷாலினி சென்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

Shalini Ajith is making Ajith fans happy

இந்நிலையில், அப்பா அஜித், அம்மா ஷாலினி உடன் க்யூட்டான குட்டி தல ஆத்விக் இருக்கும் அழகான குடும்ப புகைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அம்மா மட்டுமே ஆத்விக்கின் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு சென்று வரும் நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு வருதோ இல்லையோ தொடர்ந்து அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொஞ்சமாவது சந்தோஷப்படுத்தி வருகிறார் ஷாலினி அஜித்.

Similar Posts