சின்னத்திரை

அவள் விளையாட்டாக பேசி விட்டாள், பேட்டி அளித்த சூப்பர் தந்தை..!(She spoke playfully, gave the interview about Neeya Naana Show)

கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாரதி என்ற பெண் ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார்.

இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தன் கணவரை ஏளனம் செய்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவள் கணவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது,

மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்னுடைய மருத்துவ செலவுக்கே தேவைப்படுகிறது. இதனால் குடும்ப பாரம் முழுவதையும் பாரதி சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்னுடைய வீட்டின் முதுகெலும்பாக என்னுடைய மனைவி தான் இருக்கிறார்.

அவள் எப்போது போலும் தான் இருக்கிறார். என்னை நம்பி வந்த பெண்ணை உட்கார வைத்து சோறு போடாமல், என் குழந்தையை பாதுகாக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன்.

அவள் வீட்டில் விளையாட்டாக பேசுவதை போல தான் நிகழ்ச்சியிலும் பேசினாள். அதை பலரும் தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையாக மாற்றி விட்டார்கள். என்னுடைய மருத்துவ செலவையும், குடும்பத்தையும் அவள் தான் நடத்தி வருகிறார்.

ஆனால், அவரை வில்லியாக இந்த சமூகம் மாற்றி இருக்கிறது என்று சீனி ராஜா பேட்டி அளித்திருந்தார்.

Neeya Naana Show
Neeya Naana Show

Similar Posts