செய்திகள் | சின்னத்திரை

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணன் | Shivani Narayanan with a homely look

பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து இளைஞர்களை ஈர்த்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் மூலமாக மேலும் புகழ்பெற்ற ஷிவானி அதற்குப்பிறகு சீரியல்களுக்கு டாட்டா கட்டிவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

Shivani Narayanan with a homely look

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்து இருந்தார். அதன் பின் தற்போது பம்பர் என்ற படத்தில் ஷிவானி நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய இந்த கதையில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Shivani Narayanan with a homely look

இந்நிலையில் ஷிவானி எப்போதும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்பவர். மேலும் அவரது டான்ஸ் வீடியோக்களும் வைரல் ஆகும்.

தற்போது ஷிவானி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் திருமண வாழ்த்து சொல்ல தொடங்கிவிட்டார்கள். இருப்பினும் இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனவும் தெரிய வந்திருக்கிறது.

Similar Posts