செய்திகள்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட சிம்பு | Simbu released a surprise video for fans

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

Simbu released a surprise video for fans

இந்த சூழ்நிலையில் நடிகர் சிம்பு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,”எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. கண்டிப்பா தியேட்டர்ல வந்து படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. படம் நல்லா வந்திருக்கு. கிருஷ்ணா ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணிருக்காரு. ரஹ்மான் சார் மியூசிக் பத்தி நான் சொல்லவே வேண்டியதில்லை. நீங்களே பாடல்களை கேட்டிருப்பீங்க. நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கீங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமா அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்குறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பா எனக்கு தேவை. லவ் யூ ஆல். நீங்க இல்லாம நான் இல்ல” எனக் குறிப்பிட்டுளளார்.

Similar Posts