சாய் பல்லவி சொன்ன வார்த்தையால் நெகிழ்ச்சி அடைந்த சிம்ரன் | Simran was moved by Sai Pallavi’s words
சிம்ரன் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோயினாக வலம் வந்தவர். விஜய், அஜித், பிரஷாந்த் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.

தற்போது 47 வயதாகும் சிம்ரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை சாய்பல்லவி சிம்ரன் பற்றி பேசி இருக்கிறார். “நான் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது சிம்ரனின் ஒரு படத்தை பார்த்தேன், நான் நடிகை ஆனால் இவரை போல தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்” என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.

சாய் பல்லவி பேச்சை கேட்டு நெகிழ்ச்சி ஆன சிம்ரன் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.