செய்திகள் | திரை விமர்சனம்

அருண் விஜயின் சினம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்(Sinam Movie Review)

Sinam Movie Review

ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படம் எப்படி இருக்கு வாங்க பாக்கலாம்.

படக்குழு

இயக்கம்:

ஜி. என். ஆர். குமாரவேலன்

தயாரிப்பு:

ஆர்.விஜயகுமார்

வெளியீடு:

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட்(Movie Slides Pvt Ltd)

முக்கிய கதாபாத்திரங்கள்:

அருண் விஜய்,பாலக் லால்வானி, காளிவெங்கட்

இசை:

ஷபீர்

படத்தின் கதை

சமூகத்தில் நடக்கும் தவறுகளை அரசின் முயற்சியால் மட்டும் தடுக்க முடியாது. மக்கள் தவறுகளை தட்டிகேட்க வேண்டும்! தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சினம் படத்தை எடுத்துள்ளனர். இந்த கதையை நேர்மையான, துடிப்பான துணை காவல் ஆய்வாளர் வாழ்கையை பின்னணியில் கூறியுள்ளார் இயக்குநர்.

இந்தப் படத்தில் அருண் விஜயின் மனைவி பாலக் லால்வானிக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஒரு இரவு தன் மனைவியை முகம் தெரியாத நபர்கள் கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அவர்கள் யாரென்று கண்டுபிடித்து தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கில் களம் இறங்குகிறார் படத்தின் கதாநாயகன். அந்த சம்பவத்தை செய்தவர்களை அருண் விஜய் கண்டுபிடித்தாரா? அவர் வாழ்க்கை என்னவானது என்பது மீதி கதை.

Sinam Movie Review

முதல் பாதி முழுவதும் அருண் விஜயின் சண்டை காட்சி, கணவன் – மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு, குழந்தை மீதான பாசம் என நகர்கிறது. அதேபோல் இடைவேளைக்கு முன் படம் வேகமெடுக்கிறது.
இரண்டாம் பாதி முழுவதும் தன் மனைவிக்கு நிகழ்ந்த சம்பவத்தில் எந்த துப்பும் கிடைக்காமல் தவிக்கிறார் அருண் விஜய். விசாரணை எந்த திசையில் சென்றாலும் ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது. இது போன்ற பல காட்சிகள் உள்ளன. இறுதியில் சி.சி.டி.வி கேமராவை நோக்கி நகர்கிறார். இந்த யோசனை முன்பே வராதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

சினம் படத்தின் திரைக்கதையை வேகமாகவும், சஸ்பன்ஸூடனும் நகர்த்த வேண்டும் என்று இயக்குனர் முயற்சித்துள்ளார். ஆனால் அந்த முயற்சி 70 சதவீதத்திற்குள்ளே இருக்கிறது. இரண்டாம் பாதி விறு விறுப்பாக போகிறது என தோன்றினாலும், சில காட்சிகளை குறைத்திருக்கலாமோ எனவும் நினைக்க வைக்கிறது.

Sinam Movie Review

சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துகொண்டு, கற்பனை காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். இயக்குனர் ஜி. என். ஆர்.குமரவேலன் மற்றும் கதையாசிரியர் சரவணன் ஆகியோர் தாங்கள் எடுத்துக்கொண்ட கருத்தில் இருந்து விலகவில்லை.அருண் விஜய் காவல் அதிகாரியாக தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இந்தப் படத்தில் உயர் அதிகாரியாக அல்லாமல், துணை காவல் ஆய்வாளராகவே நடித்துள்ளார். இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு கம்பீரமாக பொருந்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நம்பும் படியாக இருக்கிறது. அதேபோல் அவர் மனைவியாக வரும் பாலக் லால்வானிக்கு தமிழ் வசனங்களில் பிரச்னை இருந்தாலும், நடிப்பில் அதை சரி செய்த முயற்சித்துள்ளார். இவர்களை தவிர காளி வெங்கட், மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் தங்கள் வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கும் கவனிக்க வைக்கிறது.

இந்தப் படத்தின் இறுதியில் தவறுகளை கடந்து செல்ல கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். அரசு முயற்சியால் மட்டும் தவறை சரி செய்ய முடியாது. மக்கள் கோவப்பட வேண்டும், தண்டனை வழங்க வேண்டும் என்ற வசனங்களை கூறியுள்ளனர். சட்டத்தை மக்கள் கையில் எடுப்பது சரியா என்பதை யோசிக்க வேண்டும்.

படத்தின் சிறப்பு

அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக தனது தத்தூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

பாலக் லால்வனியின் நடிப்பு கதைக்கு ஏற்றவாறு நன்றாக அமைத்திருந்தது

சினம் திரைப்படம் 2 மணி நேர திரைக்கதையுடம் வெளியாகியுள்ளது. நேரம் குறைவு என்பதால், படம் எப்படி இருக்கிறது என்று நினைப்பதற்குள் முடிந்துவிடும். அதனால் சினம் ஓகே என சொல்ல வைக்கும்.

இவர்களை தவிர காளி வெங்கட், மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் தங்கள் வேலையை சரியாக செய்து கொடுத்துள்ளனர்

படத்தின் சொதப்பல்கள்


படத்தின் ஸ்லோவான திரைக்கதையும், யூகிக்க கூடிய காட்சிகளும், முதல் பாதியிலே படத்தின் பெரும்பாலான காட்சிகள் தொய்வை தருவதும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துள்ளது.

மதிப்பீடு: 3/5

இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts