செய்திகள்

தியேட்டர் இல்லாததால் இப்படி தான் செய்யனும் ,மன்சூர் அலிகான்..!

மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் கடமான்பாறை. நாளை வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்து விளம்பரமும் செய்து வந்தார்.

இந்த நிலையில் ஏற்கெனவே வெளியான திருச்சிற்றம்பலம் தியேட்டரை விட்டு வெளியேறவில்லை. இன்று வெளியாகும் லைகர் படமும், நாளை வெளியாகும் டைரி படமும் மீதமுள்ள தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டதால் மன்சூரலிகான் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை.

விளம்பரத்திற்காக 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்ட மன்சூரலிகான் இதனால் விரக்தியில் இருக்கிறார். இதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் மன்சூரலிகான்.

Similar Posts