செய்திகள் | திரைப்படங்கள்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது | Sivakarthikeyan’s Ayalaan movie release date is out

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க படம் சூப்பராக தயாராகி இருந்தது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் தயாரான இப்படம் ரிலீஸிற்கு மட்டும் தாமதமாகி இருந்தது.

Sivakarthikeyan’s Ayalaan movie release date is out

‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் – ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள அயலான், தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் எனக் கூறப்படுகிறது. அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்களும் கேட்டுக் கொண்டே இருந்தனர். இப்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தரமான அப்டேட் கொடுத்துள்ளது அயலான் படக்குழு.

Sivakarthikeyan’s Ayalaan movie release date is out

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த அப்டேட் வெளியான இரண்டே நாட்களில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் அடுத்தடுத்து வெளியானதை போல, இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன.

அதன்படி இப்படம்  நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அயலான் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறதாம். என்ற மகிழ்ச்சி தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்.

Similar Posts