செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்பட இசைவெளியீட்டு விழா(Sivakarthikeyan’s Prince movie music release party date released)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் அனுதீப் கே.வி இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலரை தான் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ள தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி அக்டோபர் 9-ம் தேதி ப்ரின்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan’s Prince movie

Similar Posts