பெண் என்று கூட பார்க்கல,மன்னிப்பு கேக்க வேண்டும் சினேகன்..!
பாடலாசிரியரும், நடிகருமான சினேகனின் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாகவும் நற்பெயருக்கு களங்கம் எனவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையிடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆஜரான ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார்.
ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சினேகன் மீது நீதிமன்றத்தில் மனநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றார்.