ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் | Sridevi’s daughter Janhvi Kapoor is making her debut in South Indian cinema
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. இவருடைய மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

பாலிவுட்டில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவராகிவிட்டார், மேலும் அவர் வெள்ளித்திரையில் நடிக்கத் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களில் தனது பன்முகத்தன்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார்.

பாலிவுட்டில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் விரைவில் தமிழில் நடிக்கவுள்ளார், தெலுங்கில் நடிக்கவுள்ளார் என்று தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்தது.

ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,நடிகை ஜான்வி கபூர் முதல் முறையாக தென்னிந்திய சினிமா படத்தில் கமிட்டாகியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்கும் அவருடைய 30வது படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.