செய்திகள்

கடல் கடந்து விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து கூறிய இலங்கை பெண்..!

நடிகர் விஜயகாந்த் 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், இலங்கையை சேர்ந்த சகுந்தலா என்ற பெண், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை வந்துள்ளார்.

இவர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர், ‘நான் இலங்கையைச் சேர்ந்தவள். கேப்டன் சாரைப் பார்க்க ரொம்ப நாளா ஆசை. அவரை ஏன் பார்க்க வேண்டும் என்றால் பல இலங்கையர்களுக்கு உதவி செய்துள்ளார்.

இலங்கை மக்களால் வெளிப்படுத்த முடியாத சில விஷயங்களை விஜயகாந்த் வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரால் பேச முடியாது. பேச முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

Similar Posts