செய்திகள்

கபடியில் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு உதவிய சுரேஸ்..!

கடலூர் கபடி குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குழு சார்பில் கடந்த ஜூலை மாதம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் ஜூலை 24-ந் தேதி நடத்தப்பட்ட போட்டியில் கீழக்குப்பம் மற்றும் புறங்கனி ஆகிய இரு அணிகள் மோதின.

இதில் புறங்கனி அணியை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் ரெய்டு சென்றபோது அவரை எதிரணியினர் பிடிக்க முயன்றனர்.துள்ளிக் குதித்து தாவிய விமல்ராஜ், கீழே விழுந்து ஆடுகளத்திலே மயங்கினார். அங்கு விமல்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கபடி விளையாடும் வீரர் ஒருவர் களத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இவருக்கு தாய், கண்பார்வையற்ற தந்தை மற்றும் ஒரு தங்கை ஆகியோர் இருக்கின்றனர். விமல்ராஜை நம்பி தான் குடும்பத்தின் வாழ்வாதாரமே இருந்த நிலையில், அவரும் இறந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரின் குடும்பத்தினருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், விமல்ராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Similar Posts