செய்திகள் | திரைப்படங்கள்

அடுத்தடுத்து வெளியாகும் விடுதலை படத்தின் பாடல்கள் | Successive release Viduthalai movie songs

இசைஞானி இளையராஜா விடுதலை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முதல்முறையாக வெற்றிமாறனுடன் இளையராஜா இணைந்திருப்பதால் இசை மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருந்தது. பின்னணி இசை போலவே பாடல்களிலும் இளையராஜாவின் டச் தெரிகிறது. முதலில் உன்னோடு நடந்தா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் நேற்று ‘காட்டுமல்லி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் அருட்பெருஞ் ஜோதி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலையும் இளையராஜாவே பாடியிருக்கிறார். மேலும் முதல் இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோ போல் இந்த லிரிக் வீடியோவிலும் வரிகள் தமிழிலேயே இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்தப் பாடலை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

Successive release Viduthalai movie songs

Similar Posts