செய்திகள்

நான் விரும்பும் மனிதன்!! சுந்தர் சி என் அருகில் இருக்கும் போது அழகு சேர்க்கிறார் குஷ்பூ உருக்கமான பதிவு | The man I love!! Sundar C adds beauty when he is near me Khushboo’s emotional post

சினிமாவின் முன்னணி நடிகையாக கனவுக்கன்னியாக ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக இருந்தவர் குஷ்பூ.

Sundar C adds beauty when he is near me Khushboo

நடிகை குஷ்பூ ரசிகர்களின் கனவுக்கன்னியாக ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். கொழுக் மொழுக்கென ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக இருந்த குஷ்பூவிற்கு கோயில் கட்டிய சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதேபோல இட்லிக்கு குஷ்பூ என்று பெயரிட்டு ரசிகர்கள் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

Sundar C adds beauty when he is near me Khushboo

தொடர்ந்து படங்களில் நடித்த குஷ்பூ, ஒருகட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தமிழ்நாட்டு மருமகளானார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது சினிமாவிலும் நடித்துவரும் குஷ்பூ, தயாரிப்பு, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என பன்முகம் காட்டி வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் நடிகை குஷ்பூ தற்போது இன்ஸ்டாகிராமில் சுந்தர் சியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் தான் விரும்பும் மனிதன் சுந்தர் சி என்றும் தன்னருகில் இருந்தால் மிகவும் அழகான தருணமாக அது மாறிவிடுவதாகவும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts