செய்திகள்

டப்பிங் பேசி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் வெளியாகவுள்ள ‘பாபா’ திரைப்படம் Superstar Rajini’s film ‘Baba’ will be released again

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவான படங்களில் அதிகமானவை வெற்றிப் படங்களாகவே அமைந்திருக்கின்றன.அந்தவகையில் இவரின் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று’ பாபா’. இப்படத்தினை ரஜினிகாந்தை வைத்து ‘அண்ணாமலை, பாட்ஷா’ என இரண்டு ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் இயக்கினார்.

Superstar Rajini’s film ‘Baba’ will be released again

இப்படத்தில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இப்படத்தினை தயாரித்து, கதை மற்றும் திரைக்கதையும் அவரே எழுதியிருக்கின்றார். இதனால் தான் பாபா படம், தான் நடித்த படங்களிலேயே தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று ரஜினிகாந்த் பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

Superstar Rajini’s film ‘Baba’ will be released again

ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துவந்த நேரத்தில் தான் பாபா படமும் ரிலீஸ் ஆனது. இதன் காரணமாக இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு இப்படமானது வெற்றியை பெறாமல் தோல்வியையே தழுவியது. அதுமட்டுமல்லாது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தும்,மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்தும் இப்படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை மீளவும் ரிலீஸ் செய்யும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார் ரஜினிகாந்த. அதாவது இப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி, அதில் உள்ள சில காட்சிகளை மெருகேற்றி புதுப்பொழிவுடன் ரிலீஸ் செய்ய இருக்கின்றார்களாம்.

இதற்காக அப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது குரலில் டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார். இவ்வாறாக அவர் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

Similar Posts