இலங்கையில் படப்பிடிப்பை நடத்தவுள்ள சூர்யா 42 படக்குழு..!(Suriya 42 film crew to shoot in Sri Lanka)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் உள்ள வனப்பகுதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் ஆயிர வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பழமையான கதையை மையமாக வைத்து எடுத்துக்கப்படுக்கிறது. அறுபது நாட்கள் நடக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதோடு நடிகர் சூர்யா 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் 10 மொழிகளில் 3டி பீரியடிக் டிராமாவாக உருவாகி இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
