செய்திகள்

பான் இந்தியா திரைப்படத்தில் இணைந்த சூர்யா கார்த்தியின் சகோதரி ‘பிருந்தா'(Surya Karthi’s Sister ‘Brinda’ Joins Pan India Movie)

பான் இந்தியா திரைப்படத்தில் சூர்யாவின் தங்கை பிருந்தா இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

சூர்யா, கார்த்திக் இருவரின் தங்கை தான் பிருந்தா. சிவகுமார் தன் மகளை சினிமாத்துறைக்கு கொண்டு வரவில்லை. பிருந்தா படிப்பு, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டார். பின் இவரும் சமீப காலமாக சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு பாடல் பாடியிருந்தார்.இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பிரம்மாஸ்டரா. இந்த படம் ஆலியா பட்- ரன்பீர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், மௌனி ராய், நாகர்ஜுனா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரன் ஜோகர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Surya Karthi’s Sister ‘Brinda

வைரலாகும் பிருந்தா பதிவு:

ஆலியாவுக்காக குரல் கொடுத்ததை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி -“ பிரம்மாஸ்திரா “தமிழ் பதிப்பு எனது முதல் டப்பிங் 😊🙏🏼✨!! உங்கள் அன்புடனும் நேர்மறையுடனும்

Surya Karthi’s Sister

பிருந்தாவுக்கு குவியும் பாராட்டு:


தற்போது இந்த படத்தின் தமிழ் வர்சனில் நடிகை ஆலியா பட்டுக்கு பிருந்தா தான் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் பிருந்தா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். இதை பார்த்த அவருடைய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் பிருந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Similar Posts