கோலி பண்டிகையை கொண்டாடிய தமன்னா | Tamannaah celebrated Koli festival
நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் தொடர்ந்து விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியானயாக நடித்து வருகிறார்.

குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. எனவே பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.

இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருடைய போஸ்டரும் அண்மையில் வெளியாகியது. அதே போல சூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தமன்னா பதிவிட்டிடிருந்தார்.

இந்த நிலையில் தமன்னா வெள்ளை சல்வாருடன் கோலி பண்டிகையை கலர் பூசி அழகாகக் கொண்டாடியிருக்கிறார் இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ‘நேபாளத்திலிருந்து இனிய ஹோலி’ என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

